பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T 189

நிகண்டுகள் வழங்கும் இக்கருத்துக்களுக்கு ஏற்ப இலக்கியங்களும் பேசுகின்றன.

வடநாட்டுப் பயணத்தினின்றும் வென்று மீண்ட

சேரன் செங்குட்டுவன் தன் சேரமாதேவியுடன் கொலு வீற்றிருந்ததை,

“அணிமணி அரங்கம்

விங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறி 072 என்கின்றது சிலப்பதிகாரம் . இதனில் ஆட்சிக் களம் அரங்கமாகக் கூறப்படுகின்றது. இவ்வடியில் ஏறி என்னும் சொல்லும் உயரமான மேடை என்பதைச் சொல்லி நிற் கின்றது . இவ்வரச மேடை பொன் தகடுகளால் ஒப்பனை செய்யப்பட்டுப் பொன்புனை அரங்கம்” எனப்பட்டது.

“பாடுவார் பாணிச் சீரும்;

ஆடுவார் அரங்கத் தாளமும்” என்னும் பரிபாடலிலும்,

அவைபுகழ் அரங்கின்மேல் ஆடுவாள்” என்னும் கலித்தொகையிலும் நாட்டியக் களத்தை அரங்க மாகக் காண்கின்றோம் . சிலப்பதிகார அரங்கேற்று காதை என்னும் காதைப் பெயரும்,

“ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிர்” என்னும் மணிமேகலை அடியும் நாட்டியக் களத்தை அரங்கமாகக் குறிக்கின்றன.