பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T 191


என்பதுசேந்தன்திவாகரம். காவிரியின் இடையேமேடிட்ட திட்டு திருவரங்கம் என்னும் ஊராகியது. சிலப்பதிகாரம் இதனை “ஆற்றுவீ அரங்கம்” என்கின்றது . இவற்றால் மேடான திட்டையும் அரங்கமாகக் காண்கின்றோம்.

இவைமட்டும் அன்றி, அடுப்புப் புடை என வழங்கப்படும் அடுப்பு மேடையும் அரங்கம் என்பதை

“தீயில் அடுப்பின் அரங்கம் போல’

என அகநானூறு பாடி அரங்கம் என்பது மேடான இடம் மேடை என்பதற்கு முத்திரை இடுகின்றது.

எனவே, -

ஆட்சி மேடை புலமை மேடை நாட்டிய மேை சூதாடும் மேடை போர்ப்பயிற்சி மேடை மணல் மேை அடுப்பு மேடை எனும் மேடான களம் அரங்கு என பட்டதை அறியலாம். -

மன்றம்

ஊர் மக்கள் வழக்குகளை உசாவித் தீர்க்கவும், பொது நலன்களைப் பேசி முடிவெடுக்கவும் பரந்த நிழல் தரும் ஆலமரத்து அடியில் ஊர்ப் பெரியோர் கூடுவர் திருமுரு காற்றுப்படையில், “மன்றமும்” என்பதற்குப் பொருள் விரித்த நச்சினார்க்கினியர்,

“ஊருக்கு நடுவே எல்லாரும் - * * 183 இருக்கும் மரத்தடி'