பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 | பட்டி மண்டப வரலாறு

-என்றார். எனவே, மரத்தடியில் கூடும் ஊர்ப்பொது அவை

‘மன்றம்’ எனப்பட்டது.

}

“பொதியில், மன்றம், பொது, சபை, அம்பலம்”

என்று பிங்கல நிகண்டும் பிற நிகண்டுகளும் பேசுகின்றன.

“மன்றில் ப ழிப்பார் தொடர்பு”

எனத் திருக்குறளும் வேறு பல இலக்கியங்களும்

பகர்கின்றன . அம்மரத்தடியில் மாடுகள் கட்டப்படுவதால் மாடு கட்டும் இடமும் மன்றம்’ எனப்பட்டது . மன்றம் என்றாலே பொது இடம் என்னும் பொருள் கொண்ட தாயிற்று. பொது இடத்தில் ஊர்க்குப் பொதுவான வளர்ந்த மரங்களும், “மன்றப் பலவு”, “மன்றப் பெண்ணை”, “மன்றப் புன்னை” என மன்று’ என்னும் சொல் கொண்டு குறிக்கப்பட்டன.

இவ்வாறு மன்றம், மாடுகள் உறையும் இடமாகவும், பொதுநலம் பேசுவதற்குக் கூடுகின்ற அவையாகவும் சிறப்பாக வழக்கைத் தீர்க்கும் இடமாகவும் அமைந்தது . இதனால், மன்று என்றால் வழக்கு என்னும் பொருள் தருவதாயிற்று.

பிற்காலத்து அவ்வையாரும், வழக்காடு மன்றத்தில் வழக்காடிப் பிறர் பொருள் பறிப்பதைக் கடிந்து

“மன்று பறித்து உண்ணேல்.” என்றார். வழக்கு