பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84 [T] பட்டி மண்டப வரலாறு

மண்டபம் என்பது கட்டடச் சிறப்பை மட்டும் கொண்டது அன்று. இது கலைகள் தவழும் கவின்பெருங் கலைக்கோவிலாய்த் திகழ்ந்தது . இங்கு ஆட்சிக்கலை அமர்ந்திருக்கும், புலமைக்கலை பூரிக்கும், ஓவியக் கலை ஒளி வீசும் சிற்பக் கலை சிரிக்கும்; இசை, நாட்டியக்கலைகள் இனிது வளரும், பண்டைக்கால மண்டபத்தின் பாங்குகள்

இவை.

இத்தகைய சீர் பெற்ற மண்டபம் அரசனது அரண்மனையிலும், இறைவனது திருக்கோவில்களிலும், இயற்கைச் சோலைகளிலும் எழுப்பப்பட்டது.

அரசன் அமர்ந்து ஆட்சிமுறை செலுத்தும் இடம் ‘திருவோலக்க மண்டபம்’ எனப்பட்டது . வடநாட் டினின்றும் மீண்ட சேரன் செங்குட்டுவன் மகிழுமாறு கூத்தச் சாக்கையன் கொடுகொட்டி என்னும் கூத்தை ஆடினான் . ஆடி அவன் நீங்கியதும் மன்னன் ஆட்சி மண்டபத்தில் அமர்ந்தான் . இவ்வாட்சி மண்டபம் சிலப்பதிகாரத்தில்” வேந்தியல் மண்டபம் எனப் பட்டது . வேந்தன் அமர்ந்து ஆட்சிமுறை செலுத்தும் மண்டபம் என்று பொருள் கொண்டது இது.

நெடுஞ்சேரலாதன் தன் மக்கள் செங்குட்டுவன், இளங்கோ ஆகிய இருவருடன் அமர்ந்திருந்த ஆட்சி அரங்கு கொண்ட மண்டபம் “மணி மண்டபம்” எனப்பட்டது . அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பதிகத்தின் உரையில்,