பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 | பட்டி மண்டப வரலாறு

இது திருக்கோவிலில் அமைந்த கலை மண்டபம்.

சோழநாட்டு அரண்மனைச் சோலையில் மன்னன் பொழுதுபோக்கிடம் இருந்தது. அங்கு அரசன் அமர ஒரு மண்டபம் எழுப்பப்பட்டிருந்தது. அம்மண்டபத்தின் ஆக்கம் மிகச் சிறப்பாக வண்ணிக்கப்பட்டுள்ளது . அது எட்டு கோண வடிவில் அமைந்தது. அதன் திரண்ட தூண்கள் பவளம் பதிக்கப்பட்டவை . தூண்களின் மேல் அமைந்த போதிகைகள் மணிகள் கொண்டவை மேற் கூரையாம் விதானம் சிறந்த வேலைப்பாடுகளுடன் பொன் தகடு வேயப்பட்டது. தரை சுண்ணாம்புச் சேற்றால் மெழுகப்படாமல் பொன்னால் தளம் போடப்பட்டதாம் . இதனால் இம் மண்டபம் பொன் மண்டபம்” எனப் பட்டது . இதனை விளக்கும் மணிமேகலைக் காப்பியம் மற்றொரு மண்டபத்தையும் காட்டுகின்றது;

மணிமேகலை உதயகுமரனுக்கு அஞ்சி ஒளிந்து கொண்ட மண்டபம் ஒன்று உவவனத்தில் இருந்தது . அஃதும் பவளத்தூண், பொன்சுவர், முத்து மாலை, ஓவியக் கூரை கொண்டது . பளிங்குக் கண்ணாடி முகப்பைக் கொண்டது . இந்தப் பளிங்கு அறை பளிங்கு செய் மண்டபம்” என்றும் “பளிக்கறை மண்டபம்” என்றும் புகழப்பட்டது.

கோவலன் கொலையுண்டதும் மணிமேகலையுடன் துறவை மேற்கொண்ட மாதவி புத்த மடத்தில் அமைந்தாள்.