பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு 199

பட்டி அரங்கம் எனப்பெயர் பெற்றது.

அந்த அரங்கத்துடன் நடுவரும் சான்றோரும் ஒன்றுகூடும் கூடமாகிய அவை -

பட்டி மன்றம் எனப் பெயர் பெற்றது.

பட்டி அரங்கையும் பட்டி மன்றத்தையும் கொண்ட கட்டடமாம் மண்டபம் -

பட்டி மண்டபம் - எனப் பெயர் பெற்றது.

எனவே,

பட்டி அரங்கம் பட்டி மன்றம் பட்டி மண்டபம் என்னும் மூன்றும் சொற்போருக்குத் தொடர்புடைய பெயர்கள். -

ஆயினும், இலக்கியங்கள் பட்டி அரங்கையும், பட்டி மன்றத்தையும் கொண்டு திகழும் மண்டபப் பெயரிலே சொற்போர் நிகழ்ச்சியைப் பட்டி மண்டபம் என்றே குறிக்கின்றன. கொங்கு வேளிர் எழுதிய “ப்ெருங்கதை” மட்டும் பட்டி நியமம்” என்று குறிக்கின்றது . நியமம் என்பது நியமிக்கப்பட்ட இடம் என்னும் கருத்தில் மண்டபத்தையே குறிக்கும். -

சொற்போர் நிகழ்ச்சி பட்டி மண்டபம் என்று மண்டபத்தால் பெயர் பெற்றதோடு, சொற்போர் மன்றத்