பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் s 3

“பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் உறழ்குறித்தெடுத்த உருகெழுகொடியும்’

இவ்வடிகள்தாம் அவை.

இவற்றுள் முன்னிரண்டு அடிகள் கருத்துப் போர்ப் புலவரின் அறிவுத்திறத்தையும், புலமைத் திறத்தையும் குறிக்கின்றன. மூன்றாவது அடியில் “உறழ்குறித்து” என்பது (உறழ் - உறழ்ச்சி = மாறுபாடு) கருத்து மாறுபாட்டைக் குறித்து எழுந்ததைக் குறிக்கிறது. “உருகெழு"என்பது(உரு= அச்சம்) மிகுந்த அச்சம் தருவதைக்குறிக்கிறது. இதற்கு

“வாது செய்யக் கருதிக் கட்டிய அச்சம் பொருந்திய கொடி”

என்று நச்சினார்க்கினியர் பொருள் விரித்தார்.

பட்டி மண்டபத்தார்

அக்காலத்து அரசுத் தலைநகர்களிலும், பெரு நகர்களிலும் பொது விழாக்களின்போது பல நிகழ்ச்சிகள் அமையும். பொழுதுபோக்கிற்கு அன்றி அறிவுச்சூழலாகவும் சில இடம்பெறும்.

மதுரை மாநகரில் விழா நிகழ இருப்பதை அறிவிக்கும் முரசு அறைவோன் பல நிகழ்ச்சியாளரை அழைக்கும் முகமாகப் பின்வருமாறு அறிவித்து முரசறைந்தான்