பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு [T] 201

இக்காலத்திலும் இத்தகைய 16 கால் மண்டபங்கள் தனித் தோற்றமாக திருக்கோவில்களின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும், திருக்குளத்தின் மையத்திலும், ஊர்ப் புற எல்லையிலும் காட்சியளிப்பதைக் காண்கின்றோம். திருவிழாக் காலங்களில் கடவுளரின் திருவுருவங்களை ஒப்பனைகளுடன் இவ்வரங்கில் எழுந்தருளுவித்து மக்கள் கண்டு வணங்கச் செய்வதைக் காணலாம். இது கடவுள் திருவோலக்கக் காட்சி. .*

இவ்வாறான 16 கால் மேடை அரங்கத்தைச் சூழ அவையோர் கூடும் கூடம் அமைந்திருக்கும். அரங்கத்தையும் கூடத்தையும் கொண்ட பரந்த பட்டி மண்டபத்தின் மேற்கூரை முழுதும் மாட அமைப்பில் செங்கற் சாந்தால் மேல் வளைவு மேல் வளைவாக மூடப்பட்டிருக்கும். கருங் கற்களாலும் பாவப்பட்டிருக்கலாம். சுற்றிலும் சுவர்களால் அடைக்கப்பட்டு வாயில் கதவுகள் கொண்ட கட்டுக் கோப்பான மண்டபமாக அமைந்திருக்கும்.

கருத்துப் போருக்காக எழுந்த ‘அறைகூவல் ஏற்கப் படும் வரை பட்டி மண்டபம் அடைக்கப்படும் என்று மரபாலும், “தெற்கண்வாயில் திறவாதபட்டிமண்டபத்தார்” என வருவது கொண்டும் நான்கு புறத்துமோ, தெற்கு கிழக்கு என இரண்டு புறத்துமோ வாயில்களும் அவற்றிற்குக் கதவு களும் அமைந்திருந்தமை அறியப்படுகின்றது.

திருவிழாக் காலங்களில் இத்தகைய பட்டி மண்டபத்தில் சொற் போராளர் சொற்போர் நிகழ்த்த