பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கால ஆட்சியில் பட்டி மண்டப விளைச்சல்

அ) காலமும் விளைச்சலும்

பொன்னும் உயிரும்

“காலம் பொன் போன்றது” - என்பது ஒரு பொன்மொழி பொன்னின் மதிப்பு உயர்ந்து வருகிற இந் நாளில் காலத்தின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.

இப்பொன்மொழிக்கு ஈடாக ஒர் உயிர் மொழியை முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதனார் மொழிந் துள்ளார் . “காலம் உயிர் போன்றது” என்பதே அது. இவ் வுயிர்மொழிக்கு அவர் தந்த விளக்கம் “பொன் போனால் கிடைக்கலாம் உயிர் போனால் வராது” என்பது.

காலத்தின் ஆட்சி

மேற்கண்ட இரண்டு உவமைகளும் காலத்திற்குப் பொருத்தமானவை. போன பொன் கிடைக்காமலே போவ தில்லை. முயன்றால் அவ்வுருவத்தில் கிடைக்காமற் போனா லும் மாற்றுருவத்தில் கிடைக்கும்; அதன் மதிப்போடு கிடைக்கும்.பொன்னின் பல மாற்றுருவ மதிப்பீடுகள்தாம்