பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 |- பட்டி மண்டப வரலாறு

நாட்டுப் பொருளியலின் உயிரோட்டமாக உள்ளன. பொன்னின் ஆட்சி என்றும் நிலைப்பானது அவ்வாறே காலமும் தன் மதிப்புக் குறையாமல் என்றும் முக்காலமாய் ஆட்சி செய்து வருகிறது போன கால நிகழ்ச்சி மீட்டும் அவ்வாறே நிகழ்வதும் உண்டு மாற்றுருவில் நிகழ்வதும் உண்டு. -

மற்றொன்றையும் rG64 போன பொன் செம்பின் கலப்போடு கலப்படப் பொன்னாகவும் வரும் மெருகு பிடித்த பொன்போல உலவுவதும் உண்டு . இவை போன்று கால நிகழ்ச்சியும் தன் உருவிலும் மாற்றுருவிலும் கலப்புருவிலும் ஆட்சி செய்வது வரலாறாகும்.

போன உயிர் திரும்பாது. ஆனாலும் அவ்வுயிர் கொண்டவரின் மேதகு செயல்கள் என்றும் கால ஆட்சியில் உலகில் நின்றுமக்கள் மனத்தை ஆள்கின்றன. திருவள்ளுவர் உயிர் போயிற்று அவர்தம் அறிவு வடிப்பான திருக்குறள் இன்றும் ஆட்சி செய்கின்றது . இவர் போன்ற சாக்ரடீசு, பெர்னாடு சா, தாகூர், காந்தியண்ணல், பெரியார் ஈ. வே. இரா. முதலியோரின் மேதகு பதிவுகள் உலகில் ஆங்காங்கு அவ்வப்போது தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன.

576) விளைச்சலில் கதிரும் பதரும்

கால ஆட்சி மறையாதது; அழியாததும் ஆகும். அத்தகைய கால ஆட்சியில் பட்டி மண்டபமும் மறையா