பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 | பட்டி மண்டப வரலாறு

பெருஞ்செய் ஆடவர் தம்மின் பிறரும் யாவரும் வருக! ஏனோரும் தம்”

என்று அழைத்தான் . இது பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக்காஞ்சி தரும்செய்தி.

இதில் “ஏனோரும் தம்” என்பதற்கு நச்சினார்க் கினியர்

“மண்டபத்தாரையும் அறங்கூறவையத் தாரையும் கொணர்க” என்று எழுதினார்.

அவர் ‘மண்டபத்தார்’ என்றது பட்டிமண்டபத் தாரைக் குறிக்கும் . ‘மண்டபத்தார்’ என்றால் அது பட்டி மண்டபத்தாரைக் குறிக்கும் வழக்காக இருந்துள்ளது. இதற்குக்குறிப்புரை எழுதிய உ.வே. சா. அவர்களும்"இங்கே மண்டபத்தார் என்றது பட்டி மண்டபத்தாரைப் போலும்” என்றுகுறித்தார்.

எனவே, இம்மதுரைக் காஞ்சியில் பட்டிமண்டபத் தார் குறிப்பாகத்தான் சுட்டப்பட்டுள்ளனர் . முன் கண்ட பட்டினப்பாலை உறழ் குறித்து” என்பது கருத்து மாறுபாட்டுச் செய்தியைச் சற்று வெளிப்படையாகத் தந்துள்ளது. ஆனால், இக்கருத்துக்கள் கருத்துப்போர் நிகழ்ச்சிகள்தாம் என்பதை இந்நூல்களுக்கு முற்பட்ட நூல்களின் பாடல்களிலிருந்தும், பாடற்குறிப்புகளி