பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [...] 21 ;

சிவபெருமானின் தவத்தைக் கலைக்கக் காமவேள் அவர்மேல் மலர்க்கணை தொடுத்தான் . தவம் கலைந்து வெகுண்ட சிவபெருமான் நெற்றிக்கண்ணால் காமவேளைக் காணவே, காமவேள் எரிந்து கரிந்தான். இக்கதை கொண்டு காமவேள் எரிந்ததாக விழாக் காண்பதே காமன் விழா.

இவ்விழா ஒர் இசைப்பாடல் போராக நிகழும்.

இதற்கு மூன்று அல்லது நான்கு தெருக்கள் கூடும் சந்தியே களமாகும். ஆண்டுதோறும் மாசித்திங்களில் பிறை தோன்றும் நாள் தொடங்கி பைங்குனித்திங்கள் தேய்பிறை முடிய அமைவது இவ்விழாக்காலம்.

சந்திக் களத்தின் நடுவில் சிறு பந்தல் போல நான்கு குச்சிகள் நட்டு அவற்றில் வாழைக் கன்றுகளைக் கட்டுவர். தென்னங்குருத்தில் பின்னியவற்றைத் தோரணமாகச் சுற்றிக் கட்டுவர்.

நடுவில் பேய்க்கரும்பை நடுவர் . இது காமவேளின் வில்லாகிய கரும்பின் அறிகுறி பேய்க்கரும்பைச் சுற்றி வைக்கோல் பிரியைச் சுற்றுவர் . இஃது எரிப்பதற்கு வாய்ப்பைக் கொள்வது. அதனுடன் ஆமணக்குக் கொம்பை யும் கட்டுவர் . இது காமவேள் மலர் அம்பின் குறி . ஒரு வரட்டியைக் (சாணத்தால் தட்டையாகத் தட்டிக் காய வைத்தது) கட்டித் தொங்கவிடுவர். இது காமவேள் எரியப் போவதன் குறியீடு.

காமவேள் எரிக்கப்படப் போவதாக எரிந்த கட்சிப் பாடகர் அறைகூவலாகப் பாட அதனை மறுக்கும் எரியாத