பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 [T] பட்டி மண்டப வரலாறு

கட்சிக்காரர் ஒரு பாடல் பாடுவார். கீழ்வரும் அப்பாடலின் மேலே கண்ட விழா ஒப்பனைகளைக் காணலாம் :

‘காமன் பண் டிகையென்று வருடந்தோறும்

காணும்மாசிப்பிறைகண்டவுடனே, நீங்கள் ஆமணக்கு பேய்க்கரும்பு தட்டைக் கொண்டு

அருமையுடன் நட்டுவைக்கோல் பிரியைச் சுற்றிப் பாமரர்கள் ராட்டி ஒன்றைத் தொங்கவிட்டுப்

பங்குனிமாதப்பருவம் மட்டும் அங்கே நேமமதாய்க் கடலைமொச்சை தேங்காய் இட்டு

நெறியாகக் கொளுத்தச்சொன்ன புராணங் காட்டே’

எரியாத கட்சிப் பாடகர் பகுத்தறிவாளக் கோட்பாடாகவே

பாடுவார்.

பாடகர் இருவருக்கும் தனித்தனியே தம்பட்டம் என்னும் பறை (இதனை டேப்’ என்பர்) அடிப்பவர் தாளத்துக்கேற்ப அடிப்பார். இருவருக்கும் தனித்தனியே ஒத்துப் பாடுபவர் அமைவர் . இவ்வகையில் இரண்டு குழுக்களாக அணியாக பாட்டுப் போர் நிகழ்த்துவர் ஒரு வர் பாட மற்றவர்மறுக்கமாறி மாறிப்பாடுவர். இரவில் இப் பாட்டுப் பட்டிமண்டபம் தொடங்கிவிடிய விடிய நிகழும்.

“சல்லாப மானதேன் பழைய பாட்டைச்

சபையிலெடுத் தோதுவர்க்கு

வெல்லாமல் போகாதேன் கைபாணத்தால்

(தம்பட்டம்) விடியுமட்டும்

சரமாரி பொழிவேன் மாதோ’ (எ. க. பக்.7)