பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 F- பட்டி மண்டப வரலாறு

என்னும் பாட்டும் காட்டுகின்றது.

பண்டிகை இன்னதெனவே கண்டுரை சபைதனிலே

பாட்டுக்குப்பாட்டாகப் பாடத் தானா?

பலேசபாசு. 35Trrst!

கலகம்செய்யத் தானா?

வேண்டாம்,

பாதிமதியைத் தரித்த ஆதிசிவன் மன்மதனைப் பஸ்பமாகச் சொல்லும் புராணம் வீணா?

(எ. க. பா. பக். 10)

இவ்வாறு பாட்டுக்குப் பாட்டாக இரு கட்சியாரும் மாறி மாறிப் பாடுவர் . இது முன்னர் காணப்பட்ட தொல்காப் பியத்தின் உரையின்படி “பாட்டானும் கூத்தானும் வேறல்” என்றதில் பாட்டால் வெற்றிபெறும் பட்டி மண்டப வழி யாகும்.

இரண்டு கட்சித் தலைவருக்கும் அடியாள் கூட்டம் வந்து அமர்ந்திருக்கும். இக் கூட்டத்தார்தாம் அவையோர். தெரு ஓரத்தில் நின்றவாறே வேடிக்கை பார்ப்போரும், வர அஞ்சி வீட்டிற்குள்ளே இருந்து சுவைப்போரும் அவை யோர் பங்கினர் ஆவர். பாடுகின்ற இரு கட்சிக்காரரும் ஒரு நாட்டாண்மைக்காரரையோ தெருப் பெரியவரையோ நடுவர் நிலையில் தலைவராக அமர்த்துவர் . இவர் பெரும் பாலும் உடல் வன்மையும் பழக்கத்தில் வன்கணமும் உள்ளவராக இருப்பர்.