பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் 219

போரிடும் இரண்டு அணியினர், அவையோர் () செயல் முறைத் தீர்ப்பு, குத்துவெட்டு ஒறுத்தல் என அமைந்தது.

இக்காலத்திலும் சிற்றுர்ப் பகுதிகளில் இந்தக் காமன் விழாப் பாடல் போர் நிகழ்கின்றது. பாடுவோர் கருத்து நோக்கிலன்றி ஊதியநோக்கில் பங்குகொள்வர். இருவகைக் கட்சியையுமே ஒருவர் பாடும் பணியை மேற்கொள்வர். பாடுவோர் வழி வழிக் குடும்பத்தினராகவும் உள்ளனர். ஊதியம் பேசி ஒத்துக்கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்று வருகின்றனர். இஃது ஒரு தொழிலாகியது.

இஃதும் ஒரு திறமையின் வெளிப்பாடு என்பதாலும்,

பட்டி மண்டப வடிவங் கொண்டது என்பதாலும் இங்குச் சற்று விரிவாகக் காணவேண்டியதாயிற்று இது கலைப் பாங்குடன் வளர்க்கப்படலாம். இஃ ஒருவகைப் பொழுது போக்கு நிகழ்ச்சி தானேயன்றி ஏதும் கருத்துப்பயனோ, குழுகாயப் பயனோ கொண்டதன்று.

பிற்காலப் பட்டி மண்டபம் பற்றி நோட்டமிடும் இப்பகுதியில் இக்காமன் விழா கி , பி 16, 17 ஆம் நூற்றாண்டளவில் செல்வதால் பிற்காலப்பட்டி மண்டபங் களில் முந்தியதாக நோட்டமிடப்பெற்றது.

அடுத்து, புலமை வித்தகத்தால் நிகழ்ந்தவை காணத் தக்கவை.