பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 | பட்டி மண்டப வரலாறு

இ) கருத்து விளைச்சல்

நூல் அரங்கேற்றத்தில்

மணிமேகலைக் காப்பியக் கால அளவில் பெருகிய சமயப் பட்டி மண்டபம் பையப் பைய அருகியது. ஆனால் சமய நூல்களின் அரங்கேற்றத்தில் நேர்ந்த தடைவிடை களால் பட்டிமண்டபம் நிழலாடிக் கொண்டிருந்தது.

கந்தபுராண நூல் அரங்கேற்றத்திலும், அருணகிரி யாரின் கந்தரலங்கார நூல் அரங்கேற்றத்திலும் இவ்வாறு நிகழ்ந்தமை காணப்பட்டன. நாகபட்டினத்தில் திருநாகைக் காரோணப் புராண அரங்கேற்றம் முத்து மண்டபத்தில் நிகழ்ந்தபோதுதடைவிடைநேர்ந்தது. நூலாசிரியர் புலவர் பெருமகன் சி மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தம் புலமைத் திறங்கொண்டு வீறுற்றார் . ஆங்காங்கு அவ்வப் போது இவ்வாறு நேர்ந்தது.

இராமநாதபுரம் * அரசர் அவையில்

இராமநாதபுர அரசர் மாண்பமை பாஃச்கரசேதுபதி

(1888-1903) அவர்கள் தமிழ் உணர்வினர் புலமையர் சைவ

சித்தாந்த ஆர்வலர் புலவர்களைக் கூட்டிஅளவளாவுபவர்.

விவளாவலில் பட்டி மண்டபக் காற்றும் வீசியது.