பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 T பட்டி மண்டப வரலாறு

என்று மும்முறை நிகழ்ந்ததையும் மூன்றாம் முறை வெற்றி நிலைத்ததையும் நினைவுறுத்துகிறது. பாணபத்திரன் மனைவி - இலங்கைப் பாடினி இசை வாது நிகழ்ச்சியும் மூன்றாம் முறையில் தீர்ப்பானதும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.

நேர்ந்த வாய்ப்பும், தேர்ந்த பதிவும்

சேதுபதி அரசர் வழியில் மாண்புமை பாண்டித் துரைத் தேவர் ஆட்சி பெற்றார் . தேவரவர்கள் தேர்ந்த புலமையர். தமிழின் உணர்வும், தமிழ் ஆய்வும்கொண்டவர். தம் ஆட்சியில் மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவி னார். இது கடைச்சங்கத்திற்குப் பின் தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கமாகக் கருதப்பட்டது. அவ்வப்போது தமிழாய்ந் தோரை அழைத்து அளவளாவுவதும், பொழிவு நிகழ்த்துவதும் இவர்தம் வாழ்வியலாக அமைந்தன . சங்க வெளி யீடாகச் செந்தமிழ் என்னும் இதழையும் தொடங்கி இயக்கினார். -

ஆண்டுதோறும் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவைச் சிறப் புற நிகழ்த்தினார் . நான்காம் ஆண்டு விழா ஒரு பட்டி மண்டபத்திற்கு வழிவகுத்தது. -

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழறிஞர் திரு . வி கனகசபைப்பிள்ளை சென்னையில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பொறுப்புள்ள பணியிலமைந் தவர். மரபு வழியான தமிழ்ப் புலமையினர் “1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்"என்னும் நூலை எழுதிப்பெயர்