பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 T பட்டி மண்டப வரலாறு


இவற்றைக் கண்டிக்கும் அறிகுறியாக இவ்விரண்டு நூல்களையும் தீயிட்டுக்கொளுத்தவேண்டும் என்றார்.

பெரியாரின் கொள்கைகளை அடியொற்றி எழுதியும் பேசியும் பின்பற்றியும் நின்ற அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தீயிட்டுக் கொளுத்தவேண்டியதன் கரணியத்தை எழுதினார்; பேசினார்; முழங்கினார். கம்பரசம் என்றொரு நூலையும் வெளியிட்டார்.

தீயிட வேண்டும் என்னும் கருத்தைக் கம்பர் ஆர்வலரும், காப்பியச்சுவையில் அழுந்தியோரும் சைவப் பெருமக்களும் எதிர்த்தனர். இதற்கென ஒரு பட்டி மண்டப நிகழ்ச்சி ஏற்பாடாயிற்று. .

சென்னைச் சட்டக் கல்லூரி மண்டபம் பட்டி மண்டபக் களமாயிற்று.

9. 2. 1943 செவ்வாய் மாலை மணி 430 இல் நிகழ்ச்சி தொடங்கிற்று.

நடுவராக இந்து சமய மேற்பார்வைத் தலைவர் திருமிகு இராமச்சந்திரஞ் செட்டியார் அமர்ந்தார். இவர் சட்டம் பயின்றவர். தமிழறிவும் சைவப்பற்றும் கொண் டவர்.

“கம்பராமாயணமும் பெரியபுராணமும் தீயிடப்படவேண்டும்; தீயிடப்படக்கூடாது”

என்பது பட்டிமண்டபப் பொருள்.