பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் 229

கம்பராமாயண ஆர்வலர், சைவப்பெருமக்கள் புலவர்கள், பகுத்தறிவுக் கொள்கையர் கூடிய பேரவையாக அது அமைந்தது.

தீயிட வேண்டும் என்னும் அணித்தலைவராக அறிஞர் பெருந்தகை சி. என். அண்ணாதுரை அவர்களும், ஒத்துக் கருத்துப்போரிடுபவராக திரு ஈழத்து அடிகளும் அமர்ந்தனர். - -

‘தீயிடக்கூடாது’ என்னும் அணித்தலைவராகச் சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளையவர்களும், ஒத்து உரைப்போராகச் சட்டக் கல்லூரி மாணவர் திருவளர் சீனிவாசனும் அமர்ந்தனர். பிள்ளையவர்கள் சட்டம் பயின்றவர்; சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவர்.

‘தீயிடவேண்டும் என்பதை விளக்கி அறிஞர் அண்ணா கருத்துச் செறிவுடன் நயம்பட ஒன்றரை மணி நேரம் கருத்துரையாற்றினார்.

‘தீயிடக்கூடாது’ என்பதை வலியுறுத்திப் பிள்ளை யவர்கள் பேசினார் . பதினைந்து மணித்துளிகளே பேசித் தமக்கு உடல்நிலை நலமாயில்லை என்று கூறி மேடை யினின்றும் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

அடுத்து, தீயிடவேண்டும் என்று திருஈழத்துஅடிகள் உரையாற்ற தீயிடக்கூடாது என்று திருவளர் சீனிவாசன்