பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 T பட்டி மண்டப வரலாறு

உரையாசிரியர் தேர்ந்த அறிவினர். பலநூல்களைப் பயின்றவர். நுண்ணறிவால் உய்த்தறியும் திறன் கொண்ட வர். தம் பட்டறிவில் அவற்றை ஒத்துப் பார்ப்பவர். இவற்றுடன் தாம் வாழும் காலத்து நடைமுறைகளிலும், சொல் வழக்குகளிலும் மூலக் கருத்திற்கு இயைந்து வரும் கருத்துக்களையே சான்றாகக் காட்டுவர் இன்றேல் “இது அக்கால வழக்குப் போலும்” என்றும் குறிப்பர்.

இது அனைத்து உரையாசிரியர்க்கும் பொருந்தும். கருத்துப்போர் முதற்கல்

எனவே, உரையாசிரியர் விரித்த கருத்தைக் கொண்டு சங்க காலக் கருத்துப்போர் - பட்டி மண்டபத்திற்குக் கீழ் வருமாறு அமைப்புச் சட்டகமாக அமைக்கலாம்.

சங்க காலத்தில்,

  • புலமைச் சான்றோர் தாம் கண்ட கருத்தை

நிலைநாட்டமுற்படுவர்

%:

அக்கருத்தை மற்றையோர்க்கு அறிவித்து, தடை கூறின் விடையளித்து நிலைநாட்ட அறைகூவல் விடுப்பர் -

+

அறைகூவலின் அறிகுறியாகப் பொது இடத்திலோ, புலவர் கூடும் அவையிலோ ஒரு கொடியில் அக்கருத்தை எழுதிப்பிடித்து நிற்பர்;