பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 23i

சேலம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஏ. இராம சாமிக் கவுண்டர் நடுவரானார் . திருமாலிய சமயப் பற்றாளரான இவர் நாளும் நெற்றியில் சிவப்புக் கோட்டுத் திருமண் இட்டுக்கொள்பவர்,

கருத்து முன்னதே.

அறைகூவியவரும் அறிஞர் அண்ணா அவர்களே. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் மறுத்து உரையாடினார். நாவலர் திறனுள்ள புலமையர் சட்ட அறிஞர் தன்மானக் கருத்துள்ளவர்.

பாங்காகவும் பெருமளவில் ஒத்ததறிந்த முறையிலும் வழக்குரை நிகழ்ந்தது. பலவகையில் தமிழரைத் தாழ்த்தும் கருத்து கம்பராமாயணத்திலும், அறிவுக் கொவ்வாத நிகழ்ச்சிகள் பெரியபுராணத்திலும் அமைக்கப்பட்டிருப் பதாக நாவலர் அவர்கள் ஏற்றாலும் தீயிடல் கூடாது என்று வலியுறுத்தினார் அறிஞர் தீயிடும் நோக்கத்தை விளக்கினார் . நாவலரவர்கள் சிறிதளவே உரையாடி ஊர் செல்ல வண்டிக்கு நேரமாகிய கரணியம் சொல்லி இடையில் விடைபெற்றார்.

அறிஞர் அண்ணா மறுத்துரையாற்றினார் . அவை யோர் அறிஞர் அண்ணாவையே ஒத்து நின்றனர்.

நடுவர் இரண்டு கட்சிக் கருத்துக்களையும் சுருக்கமாக

எடுத்து மொழிந்தார் . உரையாற்றிய இருவருக்கும் அதிக அளவில் கருத்து மாற்றம் இல்லாததைக் குறித்தார்.