பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பட்டி மண்டப வரலாறு

தீர்ப்புரையாக

“நூலைக் கொளுத்துவது பயன் தரத்தான் செய்யும், வேற்றார் ஆடைகளைக் கொளுத்தினது எப்படி அன்னிய நாட்டுப் ப்ொருள்களை உபயோகிப்பதைக் கண்டிக்க ஓர் முறையாக இருந்ததோ அதுபோல் அன்னியக் கலையைக் கண்டிக்க அந்த ஏடுகளைக் கொளுத்துவது ஒரு வழி. ஆனால், அந்த ஏடுகளை உடனே கொளுத்திவிடாமல் இதோ கொளுத்துகிறோம்,கொளுத்தப்போகிறோம் என்று இன்னும் சில நாள்கள் இது போன்ற விசய விளக்கமாற்றும் காரியத்தைச் செய்யவேண்டும் என்பது என் அபிப்பிராயம்” என்று தீயிடும் கருத்துக்குச் சார்பாகவும் இதன் நடை முறையால் மாறுபாடுகள் வலுக்காதிருக்க அமைதியாகவும் தீர்ப்பைக் கூறினார்.

இத்தீர்ப்பு மக்களிடையே பரவிப் பதிவாகும் வகை யில் இரண்டு நிகழ்ச்சிகளின் கருத்துக்களும் தீ பரவட்டும் என்னும் நூலாக வெளிவந்தது . பட்டி மண்டபங்கள் இரண்டும் நிகழ்ந்த அதே ஏப்ரல் திங்களில் வெளிவந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு பதிப்புகள் பதிப் பானவை ஒரு சிறப்பாயிற்று. - -

இது தீர்ப்பினால் விளைந்த தீ பரவட்டும்.

ஒரு நூ லைக் கண்டிக்கக் கொளுத்துவ து என்பது ஒரு கடுமையோ, கொடுமையோ அன்று. மாறாக நன்மை உண்டு