பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 233

என்று பொதுவாகச் சான்று பாடினார் கவிமாமன்னர் பாரதியார் . தாம் எழுதிய கண்ணன் பாட்டுத் தொடரில் கண்ணன் என் தந்தை’ என்னும் தலைப்பில் தந்தையாம் கண்ணன் கூற்றாக வைத்துப் பின்வரும் பாடலாகப் பதிந்தார். -

மேலவர் கீழவர் என்றே வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை எல்லாம்-இன்று பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை @ இப்பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் இக்கம்ப ராமாயண, பெரியபுராணப் பொசுக்கும் கொள்கைக்குப் பொருந்தும்.

இப்பட்டி மண்டபப் பாங்கில் களம், அவையோர், நடுவர், வழக்கிடுவோர், மாறிமாறிப் பேசுதல், அணியாகப் பேசுதல், ஒற்றி வைத்தல், இடமாற்றம், தீர்ப்பை ஒற்றி வைத்தல், இரண்டாம் நிகழ்ச்சியில் தீர்ப்பு, தீர்ப்பின் பதிவு என்பன நிறைந்தமையால் இஃது ஒரு நிறைவும் பாங்கும் உள்ள பிற்காலப் பட்டிமண்டபம் ஆகின்றது.

மற்றொரு வகையிலும் இப்பட்டிமண்டபத்தை நோட்டமிட வேண்டும். இப்பட்டி மண்டபம் நிகழ்ந்த கால ஆட்சி எத்தகையது () மக்கள் உணர்வுச் சூழல் எத்தகை யது () என்பன கருதத்தக்கவை. -