பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 | பட்டி மண்டப வரலாறு

இஃது இருபதாம் நூற்றாண்டுக் கால ஆட்சி. பெரியார் அவர்களின் தன்மான உரிமைக் கருத்தால் தமிழரிடை ஒரு புதுமலர்ச்சி தோன்றிவந்த காலம் இம் மலர்ச்சிக்குத் தம்மை ஈடுபடுத்தி மக்கள் தன்மான உணர்வில் விழித்தெழுந்த காலம். இக்காலச் சூழல் தீயிடும் கருத்திற்குச் சார்பாயிற்று கருத்துப் போராடிய அறிஞர் அண்ணா அவர்கள் வியப்பும், நயப்பும் வழங்கும் சிறந்த சொற்பொழிவாளர் நிரந்தினிது சொல்லி விரைந்து தொழில் கேட்பச் சொல்பவர் . இஃதும் வலிமை வாய்ந்த துணையாயிற்று இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் கூடிய அவையோர் பெரும்பாலோர் தன்மானப் பகுத்தறிவு இயக்கச் சார்பினர் . இடையிடையே அன்னார் அறிஞர் அண்ணா உரையைக் கையொலியாலும், ஆரவாரத்தாலும் வரவேற்று வலிமை சேர்த்தனர் . இக்கூட்ட அவையினர். ஆர்வக்கொப்பளிப்பே எதிர்த்துப் பேசிய இருவரையும் இடையிலேயே வெளியேற வைத்தது எனலாம். இவை ஒரு பட்டிமண்டபத்திற்கு ஒரு குறை என்றாலும் மணிமேகலை குறித்த “பற்றா மாக்கள் தம்முடனாயினும் செற்றமும் காலமும் செய்யாது அகலுமின்” என்னும் கருத்து கால வளர்ச்சியில் பெருகியதால், தீயிடும் பட்டி மண்டய விளைச்சல் நேர்ந்தது எனலாம். -

மேலுமொரு குறிப்பைக் கொள்ளவேண்டும் . முதல் நிகழ்ச்சியாம் வழக்குரைத்து வாதிட்டமை சட்டக் கல்லூரி யில் நிகழ்ந்தது. அதன் முதல் நடுவரும், முதல் மாற்றுரை யாளரும், இரண்டாவது நிகழ்ச்சியின் மாற்றுரையாளரும்,