பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 | பட்டி மண்டப வரலாறு

“ஒரு சைவப் பெரியார் கூறியதைக் கேளுங்கள்” என்று குறித்து சைவப் பெரியார் கூறிய கோயில் அவலங்களைச் சொன்னார். அவர் சொன்னபடியே அடுக்கடுக்காகச் சொன்னார். வழிபடச் செல்வோரை இவ் அவலங்கள் எவ் வாறு திசை திருப்புகின்றன என்று சைவப்பெரியார் காட்டியதையும் எடுத்து மொழிந்தார்.

மொழிந்து,

இது இன்று நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்துள்ளவர் மைலத்தில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி 9

என்றார் . கூட்டத்து அவையோர்க்கு இது வியப்பையும் நயப்பையும் விளைத்தது . நடுவரையே தம் கருத்துக்குச் சான்றாகக் காட்டிய உத்தி இது. ,

வேட்பத் தாம் சொல்லும் திறன் படைத்த அறிஞர் அவர்கள் “பிறர் சொற் பயன் கோடல்” என்னும் உத்தியை இவ்வாறு கையாண்டமை ஒரு புதுமையாயிற்று இப் புதுமை தொடர்ந்து இக்காலத்துப் பலராலும் கையாளப் படுகின்றது. -

இப்பட்டி மண்டபத் தீ பரவட்டும் தீர்ப்பால் ஏதும் பயன் விளைந்ததா? விளைந்தது. இலக்கியப் பார்வையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. கலை என்று சொல்லி அதனையே வலையாக விரித்து மக்களைத் தன்மானமற்றவர்களாக