பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 T பட்டி மண்டப வரலாறு

சான்றோர்களின் வாழ்த்துடனும் வளத்துடனும் அக் கழகத்தைச் செம்மையாக இயக்கினார்.

இப்போது அக்கழகம் தனக்கென ஒரு மணி மண்டபம் பெற்று விளங்குகின்றது. காரைக்குடியிலேயே நிகழ்ச்சிகள் நிகழ்ந்தாலும் தமிழ் நாடெங்கிலும் புகழ் கொண்ட தாயிற்று அதனைப் பேணி வளர்த்த கம்பனடிப் பொடியார் ஆண்டு தோறும் கம்பன் விழாவை மூன்று, நான்கு நாள்கள் நிகழ்த்திக் கம்பன் புகழ் பரப்பினார் . “கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்பதை முழக்கமாகப் பரப்பினார்.

- அவர் கம்பன் கழகத்தில் நிகழ்த்திய பட்டி மண்டப நிகழ்ச்சி கருத்தொடு கண்ணியமும், முறையொடு நெறியும் சுவையோடு புகழும் கொண்டது.

ஆண்டுதோறும் நான்கு நாள் நிகழ்ச்சியில் ஒரு நாள் பட்டி மண்டபம் வைரப் பளிச்சிட்டு விளங்கியது . இது தான் பட்டி மண்டபக் களம் என்ற நிலைப்பான பதிவைப்

பெற்றது. -

கம்பராமாயணக் கதை உறுப்பினரில் எவரும் அங்கு அலசப்பெற்றனர்; ஆராயப்பட்டனர் . ஒரு கருத்தை நிலை நாட்டுவது நோக்கம் என்னும் அடித்தளம் இல்லாது போயினும் இப்பட்டி மண்டபம் கெட்டி மண்டபமே.

மும்முனைப் பட்டிமண்டபம்

இருமுனைக் கருத்தன்றி மும்முனைக் கருத்துப் பட்டி மண்டபமாகவும் நிகழ்ந்தது. கம்பராமாயணத்தில்