பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 239

தொடாதி இடம் இல்லை என்னும்படி கருத்துப் போராடல் இடம்பெற்றது. - தகவும், தமிழும் வாய்ந்த நடுவர்களே அமைந்தனர் . பரிவும் செறிவும் வாய்ந்தோரே சொற்போராளராக்கப் பட்டனர். -

கம்பன் விழாவை !லுடன் எதிர்பார்த்து வெளி யூர்ச் சுவைஞர்களும், புலவர்களும், அறிஞர்களும் வருகை தந்து அமையும் அவை அமைந்தது. -

- தொடக்கவுரை, அறிமுகம், நடுவர் முன்னுரை மூன்று

அணியினர் கருத்துமோதல், முதற்சுற்று என்று அணியினர் பேச்சுக்கள் முடிய அணித்தலைவர்கள் நிறைத்துப் பேசும் இறுதியுரைகள், நடுவர் தீர்ப்பு என்று அனைத்து உறுப்பு களும் நிறைந்த பட்டி மண்டபமாக அது திகழ்ந்தது.

கம்பனடிப்பொடி இல்லாது போயினும் இன்றும் அவர் வகுத்த வழியில் நடைபோட்டு வருகின்றது.

மும்முனைப் பட்டி மண்டபத்தில் அவையோரால் ஓர் அணி விலக்கப்படும் பின் இரண்டு அணித்தலைவர்கள் சொற்போரிடுவர். பின்னர் நடுவர் தீர்ப்பு அமையும். தீர்ப்பு அனைவராலும் பாராட்டிப் போற்றப்படும் . கம்பன் திறம் பரப்பும் நோக்கத்தில் இப்பட்டி மண்டப நிகழ்ச்சி தலை தூக்கி நின்று வெற்றி பெற்றது எனலாம். மேல் முறையீட்டு மன்றம்

மேலும், G புது அமைப்பு தோன்றியது பட்டி மண்டபத்தில் தோற்ற அணித்தலைவர் கழகத்தார்பால்