பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 | பட்டி மண்டப வரலாறு

இவ்வாறு வழக்காடு மன்றம் தோன்றி வளர்ந்து பரவியது. இது குடு மிக்கதாகவே நிகழ்ந்தது. சுவையும் கூடும். - பட்டி மண்டபச் செம்மல்கள்

கம்பன் கழகப் பட்டி மண்டபத்தில் நடுவராக அமர்ந்தோர் அறமன்ற நடுவர், புலமை வித்தகர், சொற் பொழிவுச் சித்தர், துறவுச் சான்றோர் எனச் சிறப்பிற்கும் பெருமைக்கும் உரியவராகவே இடம் பெற்றனர்.

சொற்போரிடுவோரும் சொல் வல்லுநராகவும், கருத்துக் கருத்தாளராகவும், நயமும் சுவையும் தழுவிய சொற் சிலம்பராகவும் இடம் பெற்றனர் இம்மண்டபத்தால் வளர்ந்தனர்; புகழ் பெற்றனர் பட்டி மண்டபச் செம்மல் களாயினர் அனைத்து வகையிலும் காரைக்குடிக் கம்பன் கழகப் பட்டி மண்டபம், பட்டி மண்டப வரலாற்றின் பதி வில் வைர முத்திரை விளைச்சலில் கதிர்மணி விளைச்சல்.

இவ்விளைச்சலின் பயன்பாடு என்ன? உண்மையாகவே கம்பன் புகழ் பரப்பப்பட்டது, உடன் பெருமளவில் கன்னித் தமிழும் வளர்க்கப் .

ஆனால், கம்பர் விளைக்க விரும்பிய இரண்டில் ன்றுதான் விளைந்தது. தம் நூலில் அவையடக்கம் பாடிய பர் தாம் இதனை இயற்றும் நோக்கமாக ‘இயம்புவது து” என்று வினவிப் பின்வருமாறு விடையும் பாடினார்.