பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 243

“பொய்யில் கேள்விப் புலமையினோர்புகல் தெய்வமாக்கவி மாட்சிதெரிக்கவே’

இதில் இரண்டு நோக்கம் வைத்தார்.

ஒன்று, பலர் புகன்ற தெய்வ மாட்சி தெரிப்பது. இரண்டு, கவிதை மாட்சி தெரிப்பது.

தெய்வ மாட்சி - இராமபிரானின் மாண்பு கவிதை மாட்சி - (தமிழ்க்) கவிதையின் மாண்பு

கம்பன் கழகப் பட்டி மண்டபத்தால் இவ்விரண்டில் எது விளைந்தது இரண்டுமா? இல்லை ஒன்றுதான்! அது கவிதை மாட்சி இப்பட்டிமண்டபத்தைக் கேட்டோர் ‘இராம.இராம என்று ஒதவில்லை; நெற்றியில் பளிச் சென்று திருநாமம் திட்டத் தொடங்கவில்லை. இராமர் கோயில் எழவில்லை. * ---- -

கம்பர் தம் படைப்பிற்கு இராம அவதாரம்: இராமாவதாரம் என்று கடவுட் பிறப்பாகத்தான் பெயரிட்டார் . அஃதே இராம அயணம் - இராமாயணம் (அயணம் - வரலாறு) என்று வரலாறாகத்தான் பெயர் விளங்கிற்று . கம்பன் கழகப் பட்டிமண்டபத்தால் கம்பனின் கவிதை நயமும், செறிவும், தமிழ்ச்சுவையும், சூழலும் தாம் வெளிப்பட்டன. - -

கம்பனடிப்பொடியாரே இராமன் புகழ்பாடி இராம மந்திரம் வளர்ப்போம் என்பதை முழக்கமாகக் வைக்க