பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 T பட்டி மண்டப வரலாறு

வில்லை. “கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்றே முழங்கச் செய்தார். கம்பன் கழக விழா மேடையில் இராமர் படத்தைப் போற்றவில்லை . கம்பர் படந்தான் போற்றப்பட்டது. இராமஇராம மந்திரம் ஒதப்பட வில்லை கன்னித் தமிழ் வணக்கந்தான் சிறந்தது. கம்பன் புகழ் முழங்கப்பட்டது. கன்னித்தமிழ் வளர்க்கப்பட்டது. இவை தாம் உண்மையில் விளைச்சல் தந்த பயன்கள்.

இப்பயன்கள் விளைவதில் கம்பராமாயணத்தினைத் “தீயிடும்” நோக்கினர்க்கு மறுப்பில்லை; மாற்றும் இல்லை. ‘தீயிடும் பட்டி மண்டபத்திலும் அறிஞர் அண்ணா அவர்கள், -

“கம்பரின் கவித்திறமையைக் கண்டு நாங்களும் வியக்கிறோம். அந்தத் திறமை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம். அவரது கவிதையின் விளைவாகத் தமிழ் இனம் தாழ்ச்சியுற, ஆரியத்திடம் அடிமைப்படும் விளைவு நேரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படு கிறோம் . நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திற னையல்ல; அதன் தன்மையை, விளைவை’ என்றார். கம்பன் கழக நிகழ்ச்சிகளுக்குப் பின் அறிஞர் அண்ணா திர்பார்த்தது போன்று கவிதை பாராட்டப்பட்டது. மிழ்ச்சுவை வளர்க்கப்பட்டது . எனவே, காரைக்குடி பன் கழகப் பட்டி மண்டபத்தின் விளைச்சல் அறிஞர் அண்ணா தீயிடும் நோக்கம் எழுப்பிய புரட்சி விளைச்சலுக்கே சார்பாயிற்று. -