பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 T பட்டி மண்டப வரலாறு

“கழகம் பட்டிமம் கல்வி பயில் களம்” என்பவற்றின் முற்கால நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு நூல்களை ஆய்ந்தறிந்த புலமையரின் அறிஞரின் கருத்துரைகளைப் பொழியக் கேட்கும் மன்றமாகவே தொடங்கப்பட்டது. காலப்போக்கில் அருகிய நிகழ்ச்சிகளாகப் பட்டி மண்டய நிகழ்ச்சியும் இடம் பெற்றது. . குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை இங்குக் காண்பது சிறப்பாகும். - .

1959 இல் ஒரு பட்டி மண்டப நிகழ்ச்சி நிகழ்ந்தது. எடுத்துக்கொண்ட கருத்து .

“வடமொழிக் கலப்பால் தமிழ் கெடுமா?

வளருமா?” என்பது

நடுவராகச் செந்தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ. சிதம்பர நாதன் செட்டியார் அமர்ந்தார் வடமொழிக்கலப்பால் தமிழ் வளரும் என்னும் அணித்தலைவராக, பெயர்பெற்ற பகுத்தறிவாளரும், பெரியார் பாசறையிலிருந்து பெரியார் வரலாற்றை முதன் முதலில் எழுதியவருமாகிய அறிவர்சாமி. சிதம்பரனாரும் அணியினராக திரு பார்த்தசாரதி அவர் களும் திரு சீனிவாசன் அவர்களும் அமாந்தனர். .

வடமொழிக் கலப்பால் தமிழ் கெடும் என்னும்

அணித்தலைவராக இதனை எழுதுபவரும், அணியினராகப் புலவர் மா பிள்ளையார், திரு ஊ செயராமன் ஆகிய