பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 247

இருவரும் அமைந்தனர். “தமிழ் கெடும்” என்னும் அணியின் மூவருமே எதிர்கட்சித் தலைவர்பால் பெருமதிப்பு வைத்த வர்கள் . எனவே, மிகப் பணிவுடன், பண்பாகவும், கருத் துடன் கண்ணியமாகவும் சொற்போர் அமைந்தது.

நூற்கருத்துக்கள், நடைமுறை இடையூறுகள், நிகழ்ந்த கெடுதிகள், மறைந்த அரிய தமிழ்ச்சொற்கள், வடமொழி யால் தமிழ் மரபும் பண்பாடும் வாழ்வியலும் சிதைந்தமை எனக் கெடுதிக்குக் காட்டப்பட்டன.

நூற்கருத்துக்கள், நூல்கள் பெருகிய நடைமுறை எளிய நடை உருவானமை, வடமொழிக்கலப்பில்லாத நூல் இல்லை, வடவர் வாழ்வியல் தமிழர் வாழ்வியலைக் கெடுக் காமை, தமிழில் இல்லாத கலைகளைத் தமிழ் பெற்றமை என வளர்ச்சிக்குக் காட்டப்பட்டன.

சொற்போர் கருத்துப் போராகவே நிகழ்ந்தது. சூடு இல்லை, ஆனால் சப்பென்றில்லை . சுவையாக இருந்தது, கவைக்குதவும் கருத்துக்கள் வெளியாயின.

நடுவர் அவர்கள் இடையிடையே நயம் ஊட்டி னார்கள் முடிவுரையில் பல சான்றுகளைக் காட்டியும் ஓரிடத்தில் உணர்ச்சி வயப்பட்டும் சில இடங்களில் கவன்றும், கடிந்தும் கருத்துரைத்து “வடமொழிக் கலப்பால் தமிழ் கெடும்” என்று தீர்ப்புரைத்தார்கள்.

இத்தீர்ப்புக் கருத்து பட்டிமன்றப் பதிவேட்டின் பதியப்பட்டு அணியினராலும் நடுவராலும் அவைச் சான்றோர் சிலராலும் கைச்சான்றிடப்பட்டது.