பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 s− பட்டி மண்டப வரலாறு


யிட்டு ஒன்றைச் சொன்னால், அது தான் மந்திரம்

அம்மந்திரம், சொன்னவர் எண்ணத்தைத் தவறாமல்

நிகழ வைக்கும் என்பதாகும்.

இக்கருத்துள்ள உரையை விளக்கிய பேராசிரியர்,

“தெற்கண் வாய்திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு, நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம்” என்றார் . இதில் பட்டி மண்டபம் என்பதை அறிமுகப் படுத்தினார்.

இம்மந்திரத்திற்கும் அதனால் நிகழ்ந்தவற்றிற்கும் எடுத்துக்காட்டாக இரண்டு வெண்பாக்களைக் காட்டி fr.

சாவப் பாடிய மந்திர வெண்பா :

“ஆரியம் நன்று தமிழ்தீது எனவுரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானை சீரிய அந்தண் பொதியில் அகத்தியன் ஆணையால் செந்தமிழே தீர்க்கசு வாகா

வாழப் பாடிய மந்திர வெண்பா :

‘முரணில் பொதியில் முதற்புத்தேள் (அகத்தியர்) வாழி! பரண கபிலரும் வாழி!-அரணியல் ஆனந்த வேட்கையான், வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் சேர்கசு வாகா