பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 | பட்டி மண்டட வரலாறு

அச்சேறி இருந்தன . இடையில் பிரிக்குமாறு இழிதுளை இடம் பெற்றிருந்தது. சிறப்பவை உறுப்பினர் அதனைப் பெற்று இரண்டாகப் பிரித்து அவர் விரும்பும் தீர்ப்பு ஒன்றைக் குடத்திலிட்டார் . மற்றொன்றை குடத்தாரின் பின்னே வந்த கூடையாரின் கூடையில் இட்டார்.

அடிகளார்கருத்துரைநிகழ்ந்துகொண்டேஇருந்தது. வாக்கிடப்படாத சீட்டுக்களைக் கொண்ட கூடை மேடையில் வைக்கப்பட்டது . ஒரு புறம் பின்னே குட வோலைச் சீட்டுகள் பிரித்து எண்ணப்பட்டன.

அடிகளார்கருத்துரை நிகழ்ந்துகொண்டே இருந்தது. - எண்ணப்பெற்ற வாக்குகள் தாளில் எண்ணிக்கை யுடன் பதியப்பட்டு இரண்டு கட்டுகளுடன் இயக்குநர் கையில் கொண்டு நடுவர் பின்னே நின்றார்.

நடுவர் தவத்திருஅடிகளார்

“சமயத்தால் தமிழ் வளர்ந்தது” என்று தீர்ப்பைக் கூறினார். . -

சிறப்பவையினர் வாக்குத் தீர்ப்பு பதிந்த தாளையும், சீட்டுக் கட்டுக்களையும் இயக்குநர் நடுவரிடம் கொடுத்தார். அதன் தீர்ப்பை நடுவர் படித்து"தமிழால் சமயம் வளர்ந்தது” என்றார். அவையில் தனியொரு ஆரவாரம் நிகழ்ந்தது.

அவையோர் தீர்ப்பும், நடுவர் தீர்ப்பும் மாறு பாடாயின. -