பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o பிற்காலத்தின் பொற்காலம்

பட்டி மண்டபம் பல்கிய விளைச்சல்

கம்பன் கழகப் பட்டி மண்டபத்தால் தமிழ் நாட்டில் பரவலாகப் பட்டி மண்டபங்கள் நிகழலாயின. பெருமளவு தகுதியில் பரவத் தொடங்கியது . தகுதிவாய்ந்த அறிஞர் பங்கு பெற்றனர். இதனால் பலர் பயிற்சியும் பெற்றனர்.

ஆண்டுதோறும் நிகழும் விழாக்கள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சிகளில் பட்டிமண்டபம் சுவையான நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டது . மெல்ல மெல்லக் கவர்ச்சி நிகழ்ச்சி யாயிற்று நூற்றுவர் அளவில் அவையோரைக் கொண்ட நிகழ்ச்சியாக இருந்தமை, ஆயிரவர் பல்லாயிரவர், நூறாயிர வரைக் கொண்ட நிகழ்ச்சியாகப் பெருத்தது.

மதுரை அரசரடிப் பிள்ளையார் விழாப் பட்டி மண்டபம் ஆண்டுதோறும் தவத்திரு அடிகளார் தலைமை யில் குறிக்கத் தக்கதாக நிகழ்ந்தது தவத்திரு அடிகளார் பறம்பு மலையில் நிகழ்த்திய பாரிவிழாக்களின் இலக்கியப் பட்டிமண்டபங்களும், திருப்பத்துர்த் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய சைவ சமயக் கருத்துப் பட்டிமண்டபங்களும் சிறப்பிடம் பெற்றன.

பறம்புமலைப் பாரிவிழாப் பட்டி மண்டபம் அந் நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர் வருகையுடன்