பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 T பட்டி மண்டப வரலாறு

பட்டியல் தமிழ்ப் பேராளரின் பொற்பட்டியலன்றோ? இவ்வகையில் இதற்கொரு தனிச்சிறப்பு அமைந்தது.

இது பாப் பட்டி மன்றம் எனப்பட்டது. நடுவராக ‘தென்மொழி யாசிரியர் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அமர்ந்தார்.

பொருள் :

“திரு வி க வாழ்வின் பெரும்பங்கு மொழித் தொண்டே பொதுத்தொண்டே” என்பது.

மொழித்தொண்டே’ அணியில் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் (அணித்தலைவர்) ‘வலம்புரி இதழாசிரியர் புலவர் இறைக்குருவன், தஞ்சைப் பாப்புலவர் தொல்காப்பியன் அமர்ந்தனர் (காட்டப்பட்ட பட்டி மண்டப நிகழ்ச்சிகளில் இதனை எழுதியவர் பங்கு கொண்டமை இடம் பெற்றிருப்பது எழுதுபவர் நேரில் கண்டபடி விவரம் தரும் நோக்கம் கொண்டது.) .

‘பொதுத்தொண்டே அணியில்,

புலவர் ஏறுச. பாலசுந்தரம்(அணித்தலைவர்) கவிஞர் தரங்கை பன்னீர்ச்செல்வம், பாவலர் கு சிவஞானம் (பின்னர் தமிழ் வளர்ச்சி இயக்க இயக்குநர்) அமர்ந்தனர்.

இரு அணிக் கவிஞர்களும் விருத்தம், கவிவெண்பா, அகவல், வெண்பா தாழிசை எனப் பல்வகைப் பாக்களைத் நாடக்கத்தில் படித்தனர் இடையிடையே கவிதைகள்