பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 9

மந்திரம்

இவ்விரு வெண்பாக்களில் முதல் வெண்பாவில் “நிறைமொழி மாந்தர்” என்னும் நூற்பாவின் சொற்றொட ராகிய “ஆணையிற் கிளந்த” என்றதற்கேற்ப “ஆணை"யிடல் உள்ளது . இரண்டாவது வெண்பாவில் மற்றொரு சொல் லாகிய மந்திரம் என்றதற்குச் சுவாகா என்னும் சொல் உள்ளது. வாழப் பாடியதால் வாழி வாழி சொல் உள்ளது.

‘சுவாகா என்னும் மந்திரம் வடமொழியாகுமோ என்னும் ஐயத்திற்குரியது . ஆனால், பேராசிரியர் இச் சொல்லைத் தமிழ் என்றே கொண்டுள்ளார். எவ்வாறெனில் அவரே,

“மறைமொழி தானே என்று பிரித்தான் (தொல்காப் பியர்) இவை தமிழ் மந்திரம் என்றற்கும்” என்று எழுதினார். அவரே இவ்வெண்பாக்களை ஏற்று எடுத்துக்காட்டியுள்ள மையால், அவர் கொண்டபடி சுவாகா என்பது தமிழ்ச் சொல்லாகிறது. மேலும் இதற்கொரு பக்கச் சான்றாக ஒரு கருத்தையும் வைத்துள்ளார் . அஃதாவது (சுவாகா) வேத மொழியாகிய வடமொழித் தொடர்புடையதன்று என்று காட்டுவார் போல அந்நூற்பாவில் உள்ள மறைமொழி’ என்பதை வடவேதமாகிய நான்மறை என்று கொள்ள

வில்லை.