பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 | படட்டி மண்டப வரலாறு

19.6.1969 இல் நிகழ்ந்த இச்சிலைத் திறப்பு விழா வில் மறைமலை அடிகள் நினைவு மலர் ‘மலர்ந்தது. அந் நாளைய முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் சிலையைத் திறந்து வைத்தார்கள் காலையிலும் மாலையிலுமாகக் கூடிய அவையில் முத்தமிழ்க் காவலர் கி , ஆ , பெ விசுவநாதனார், நாவலர் இரா. நெடுஞ்செழியன், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், அறிவியல் அறிஞர் கோவை, கோ. து. நாயுடு, பெரும்புலவர் அவ்வை துரைசாமிபிள்ளை பேருந்து நிறுவன உரிமையாளர் வீ. பார்த்தசாரதி முதலிய பெருமக்கள் அமர்ந்தனர் . இப்பேரவையில் இம்மலர் மலர்ந்து காலையிலும் மாலையிலும் மணம் பரப்பியது.

இம்மலரில் எழுத்துரைகளாக ஒரு பட்டி மண்டபம் ‘ஒரு குறள் பட்டியரங்கு’ என்னும் எழுத்துப்பொருளைக் கொண்டு தொகுக்கப் பெற்றது.

பட்டி அரங்கக் குறள்

“அறத்தா றிதுவென வேண்டா, சிவிகை

பொறுத்தானோர்ேந்தா னிடை”

என்பது நடுவராக அந்நாள் சட்டப் பேரவைத் தலைவர் புலவர் கா. கோவிந்தனார் அமைந்தார்.

“சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தானிடை அறத்தாறு"