பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 | - பட்டி மண்டட வரலாறு

குடைய நடுவர் . அவையோரும் போரிட்டோரும் ஏற்றுக் கொள்ளும் அளவில் தீர்ப்பு வழங்கி நடுவர் தகுதிக்கு முடிசூட்டியவர் அடிகளார் -

அடிகளார் போன்றே சென்னை உயர் அறமன்றத் தலைமை நடுவராக அமர்ந்து சிறப்புற்ற திரு மு மு . முகம்மது இசுமாயில் அவர்கள் ஆழ்ந்த கருத்துடன் தீர்ப்பளித்துச் சிறந்த நடுவர். -

பிற்காலப் பட்டி மண்டபத் தொடக்கக் காலங்களில் திருச்சி தேசியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த முனைவர் இராதாகிருட்டிணன் அவர்கள் தலை தூக்கிச் சிறந்த நடுவராக விளங்கியவர் நயம்பட உரைப்பது சொற்சிலம்பங்கள் இன்றிச் சொற்பொதிவு களால் கருத்தை வழங்கியவர் . அவர் வழி அடியொற்றிப் பட்டிமன்றப் பேச்சாளரானோர் பலர். அவருள் முதன்மை யானவர் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வ ராயிருந்த முனைவர் சத்தியசீலன் அவர்கள்.

முனைவர் சத்தியசீலன் அவர்கள் இன்றளவும் நடுவர் தகுதியைத் தம் உரிமையாகக் கொண்டுள்ளவர் பொழிவு ஆற்றலுள்ள இவர் நாவுக்கரசர் என்று போற்றப்படுபவர். சுவையாக உரைப்பது மட்டுமன்றிச் சுவையாகப் போரா ளர் உரைக்க வழி வகுப்பவருமானவர் எண்ணிக்கையற்ற பட்டி மண்டபங்களை நடுவராக அமர்ந்து அணிசெய்து வருபவர் வழக்காடு மன்றங்கள் இவரால் சுவையிலும்

குட்டிலும் நிற்கும்.