பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பட்டி மண்டப வரலாறு T L#-

முனைவர் அ. அறிவொளி என்றாலே பட்டி மண்டபமும், வழக்காடு மன்றமும் நினைவிற்கு வரும் அளவு பெயர் பெற்றுள்ளார். புகுந்தவற்றிலெல்லாம் புகழ் பெற்றுள்ள இவர் பட்டி மண்டபத்திற்குப் புகழ் சேர்த்து வருபவர். - -

முகத்தில் மீசையை வளர்க்காத நாள் முதலாக இன்று தாடி செறிந்துள்ளது வரை பட்டி மண்டப வழக்காடு மன்றமே அவரது பெயர் பரப்பிய பணி நகைச்சுவையால் பட்டி மண்டபத்திற்குப் புதுமெருகு ஊட்டுபவர். நகைச்சுவை அரசு என்று பெயர் பெற்றுள்ளவர். இவரது சொற்போர் முறை தனித்தன்மையது. எதிர்ப்பேச்சாளரை உயர்த்துவதுபோன்று தாக்குவதும், அவர் கருத்தை ஏற்றுக் கொள்வது போல் தட்டுவதும் இவர் கலைத்திறன். இவற்றிற்கெல்லாம் மேலாக சொற்றொடர்ப் பின்னலால் அவையோரைக் குழப்பி நகைச்சுவை மீன் பிடித்துக் குயீர் சிரிப்பை ஏற்படுத்துவது இக்காலத்தில் இவர்தம் தனிக் கலை . இவருடன் இணைந்தும் கலந்தும் இவர்தம் எதிர்ப் போராளியாகத் திகழும் முனைவர் அ வா இராச கோபாலன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் கருத்துக்களை நயமாக்கிக் குரலாலும் சொல்லாலும் அழுத்தம் கொடுப் பது இவர்தம் சொற்போர்க்கலை பட்டி மண்டபத்தில் அவரா என்னும் எதிர்நோக்கை ஏற்படுத்தியவர்.

முனைவர் இரா. செல்வக்கணபதி தெளிந்து தேர்ந்த

ஒரு பேராளர் சமயத்துறை இலக்கியத்துறை வல்ல இவர் எளிய கருத்தைப்போலத் தொடங்கி ஆணிப் பாய்வாக