உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [T] 271

மாற்றிப் போரிடுபவர் . இப்போது நடுவர் அமர்விலும் சிறப்பவர். -

புலவர் கோ. சாரங்கப்பாணி உரத்த குரலில் கருத்தை முடுக்கி விடுபவர் வழக்கறிஞர் சுகி , சிவம் அமைதிப் பாங்கிலே வலிமை கூட்டுபவர் முனைவர் தி இராச கோபாலன் ஆற்றொழுக்கிலேயே அருவி காட்டுபவர். முனைவர் செகந்நாதன் ஒரே சீரான முனைப்புக் குரலில் கருத்தை முடுக்கிவிடுபவர் பேராசிரியர் சாமி தியாக ராசன் அமைதிக்கு மெருகு தந்து அருங்கருத்துக்களை அதிரடி இல்லாமல் வெற்றிக்கு வழிகாண்பவர்; இரட்டை யர்களான நாகூர்ப் புலவர் இர். சண்முகவடிவேலு, புலவர் சீனி, சண்முகம் ஆகியோர் எளிய நிகழ்ச்சிகளை நகைச்சுவை களாக உதிர்ப்பவர்கள் . முனைவர் தெ ஞானசுந்தரம் ஆழமான கருத்தை நயத்தில் தோய்த்து வழங்குபவர். முனைவர் சேகரும் முனைவர் சுப்பிரமணியமும் வழக்காடு மன்றப் புலிகள் . மேலும் அகர முதல்வன் முனைவர் சங்கரவடிவேல் மக்கள், கவிஞர் அரு. நர்கப்பன் முதலி யோர் களத்தில் தல்ை தூக்கி நின்று சிறப்பவர்கள். ஏறத்தாழ 100 என்று எட்டும் அளவில் தமிழ்மண்ணில் சொற்போராளர் பெருகியுள்ளனர் ஒருவகையில் பட்டி மண்டபப் பரவலுக்கு உரமூட்டுபவர்கள் இன்னோர்.

மகளிர் பங்கு

ஒன்றைத் தனிச்சிறப்பாகப் பதியவேண்டும் . அது மகளிர் பங்கு எதிலும் முகம் கொடுத்துப் புகுந்தவற்றிற்கு