பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 273

‘ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’

என்பது அருங்கருத்துள்ள குறள் , அருங்கருத்தின் உள்ளிட்டைத் தவத்திரு அடிகளார் வெளிப்படுத்திய திறம் கருதத்தக்கது மட்டுமன்று; கடைப்பிடிக்கவும் தக்கது.

குறளின் “ஒத்தது அறிவாள்” என்பதை அடிகளார் ப்வாறு விளக்கினார் * -

Jill

மாறுபடும் இருவர் கருத்துக்களில் பெருமளவோ ஒரளவோ ஒத்த கருத்துக்கள் இருக்கலாம். அவற்றைக் கூர்ந்து அறிந்து இணைந்துபோவது நல்ல இயல்பு அணுவளவு ஒத்தது இருப்பினும் அறியவேண்டும் இதனைத் திருவள்ளுவர் உயிர்வாழும் முறை என்றார் அறியாதவனைச் செத்தாருள் வைக்கப் படும்” என்று கடுமையாக குறித்தார் . எனவே, வாழ்வை உயிரோட்டமுள்ளதாக ஆக்கிக்கொள்ள ஒத்தது அறியவேண்டும்’ - இவ்விளக்கம் பட்டி மண்டபத்திற்கே ஒர் உயிரோட் டந்தந்த கருத்தாக அமைந்தது.

இஃது ஒரு சான்று. நடுவராயமைந்த அறிஞர்கள் இது போன்று அரிய கருத்துக்களை வழங்கி நெறிப்படுத்தி யுள்ளனர். இலக்கியக் கருத்துள்ள பட்டிமண்டபங்களால் வாழ்வியலுக்குரிய, நட்பு, ஈகை, பெருந்தன்மை, பண்பு,