பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 [ ] பட்டி மண்டப வரலாறு

அறி பார்த்தீர்களா? பார்த்தீர்களா? இத்தனை ஆண்டுகள் பழகிய என் பேச்சை நம்பாமல் உயிரற்றகண்ணாடியை நம்புகிறீர்கள்.

சத் கண்ணாடி அடுத்ததுகாட்டும் பளிங்கு அல்லவா?

அறி அதுசரியில்லை. அது நம்ப முடியாதது.

சத் எப்படி?

அறி தாங்கள் எந்தக் கையால் சாப்பிடுவீர்கள்?

சத் வலக்கையால் தான்.

அறி கண்ணாடிக்கு முன் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் . கண்ணாடி எந்தக் கையால் சாப்பிடுவதாகக் காட்டும்!

அவைகுபீர் சிரிப்பை நிரப்பும்.

நகைச்சுவைக் கதைப்பு

இவர் போன்று மற்றையோரும் வேறு சில நிகழ்ச்சி

களைச் சொல்லி, கற்பனையாகவும் சொல்வர்.

ஒன்று

‘நாகூர் அண்ணன் தம்பி இருவர் வீட்டில் மாட்ட ஒரு படம் வாங்கி வந்தனர் தம்பி படத்தை மாட்டச்

சுவரில் ஆணி அடித்தான் ஆணி இறங்கவில்லை.