பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 T பட்டி மண்டப வரலாறு

மாக அமையும் கம்பர், திருவள்ளுவர் முதலியோர் போல வழக்காடுவோர் ஒப்பனை செய்துகொண்டு மேடையில் அமைந்து சொற்போரிடும் நிகழ்ச்சி எழுந்தது . சில நிகழ்ச்சியளவில் அது மறைந்தது.

பட்டி தொட்டிகளில் பரவல்

பரவலான பட்டி மண்டபம் நகரோடு ஊரில் நடந்து, ஊரோடு பட்டி தொட்டிகளுக்கும் ஒடிற்று இலக்கிய, சமுதாய, வாழ்வியல், அரசியல் நிகழ்ச்சியில் இடம் கொண்டது.

இந்நிலையில், மக்கள் ஆர்வமறிந்த வானொலி நிலையங்கள் ஆங்கங்கு நிகழ்ந்த பட்டி மண்டப நிகழ்ச்சி களைச் சுருக்கி ஒலிபரப்பத் தொடங்கின . சிற்றளவில் வானொலி நிலைய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இதுபோன்றே தொலைக்காட்சியும் ஈடுபாட்டுடன் ஒளிபரப்புகிறது. முத்தமிழ் மன்றம் என்னும் ஒளிபரப்பில் பட்டி மண்டப நிகழ்ச்சியாக நடந்தவை இடம் பெற்றன; பெறுகின்றன. - - -

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மாணவர்கள் பங்குபெறும்பட்டிமண்டபம் நிகழ்ந்தது. வானொலியிலும் சிறுவர்பட்டிமண்டபம் ஒலிபரப்பப்பட்டது.

எழுத்தறிவைப் பரப்ப முனைந்து செயற்பட்டுவரும் அறிவொளி இயக்கத்தினரும் பட்டி மண்டபம்