பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [...] 11

இவ்விரண்டு உரைகளையும், உரைவிளக்கங்களையும் கொண்டு பின்வருமாறு பட்டி மண்டப வரலாற்றுக் கருத்தின் இரண்டாவதுகல்லாகப் பின்வருமாறுஅமைப்புச் சட்டகம் அமைக்கலாம்.

இரண்டாவது கல் சட்டகம்

  • மதுரையில் பட்டிமண்டபம் இருந்தது,

அஃதும் நடைமுறையில் இருந்தது.

ஒருவன் ஒரு மாறுபட்ட கருத்தைப் பட்டி மண்டபத்தில் சொல்வதுண்டு;

சொன்னவன் பட்டி மண்டபத்தில் தானே வலியப் புகுந்து சொல்வதுண்டுபோலும்,

பட்டிமண்டபத்தில் அறைகூவல் விடுக்கப்படும்;

அது ஏற்கப்படும் வரை பட்டி மண்டபத்து வாயில் கதவு அடைக்கப்படும்;

மண்டபத்தார் திறமை வாய்ந்த புலவரை அறை கூவலை ஏற்றுத் தீர்த்து வைக்குமாறு வேண்டுவர்;

மண்டபத்தாருக்காக ஒரு பெரும்புலவர் முன்வந்து கருத்துப் போரிடுவார்;

கட்டுப்படாமல் விடாப்பிடியாகப் பேசப்பட்ட

துண்டு;