பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல [...] 28.

மனோன்மணிய ஆசிரியர் பேராசிரியர் பெ. சுந்தர னார் இதை முன்கூட்டியே உணர்ந்துமிருக்கலாம் . அவர் காலத்தில் காணப்பட்டும் இருக்கலாம்.

அதனால்,

“வார்த்தை கத்தும் வாதியர்’

என்று எழுதினார் . மேடையில் வெடிக்குரலில் தெருச் சண்டை இடுபவர் போன்று வார்த்தைகளால் கத்தும் பேச்சாளர் மேடை ஏறினர். பேச்சு மேடை சடுகுடு மேடை யும் ஆயிற்று. இதனை எழுதுபவர் நடுவராக அமைந்த ஒரு மேடையில் வழக்காடிய இருவர் மற்றவர் முன் பாய்ந்தும், கையை உயர்த்தி அறைகூவியும் மூச்சு விடாமல் பேசியும் “சடுகுடு ஆடினார் . நடுவர் நகைச்சுவையாக இரண்டு வழக்காடுவோருக்கும் மேடை இடம் போதாதிருப்பதால் நடுவரும் பிறரும் மேடையை விட்டிறங்கி முழு மேடையை யும் சடுகுடு ஆடக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று அறிவிக்க நேர்ந்தது.

சில வழக்காடுவோர் நிலை இவ்வாறு ஆனது போன்று நடுவர் சிலர் மலிவான கைதட்டல் கருதி வாய்க்கோணல், தலைத்திருக்கல், கைப்பின்னல், நாக்குச் சுழற்சி, பார்வைப் பெருக்கம் முதலிய உறுப்புச் சிலம்பங் களாடுகின்றனர் . அந்த நேரம் பாராட்டாகக் கிடைத்தால் போதுமென்று இவ்வாறெல்லாம் நடித்துக் கேட்போரை மலிவு நிலைக்கு விரட்டுகின்றனர்.