பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 [ ] பட்டி மண்டப வரலாறு

இவ்வாறு கதிர்மணியுடன் பதர் நுனியும் இடம் பெற்றமை பகடிக்குரியதாகியுள்ளது.

மேடைச் சடுகுடு, பகடிச் சிலம்பம், எதிர்ப்போரை ஏளனம், அவர்தம் குணங்களைக்குத்திக்காட்டுதல், அவர்தம் வாழ்க்கைச்செய்திகளைத்தோலுரித்துக்காட்டுதல்முதலிய பலவும் பட்டி மண்டபப் பதர்களே.

- இவற்றால் பட்டி மண்டபம் ஒரு சார்பில் மலிவுப்

பொழுது போக்காகி வருவது தமிழ் மரபாளரைக் கவல வைத்துள்ளது. உயர்ந்தபட்டிமண்டபத்தை அங்கணத்துள் - உய்த்த அமுதமாக்கி வருகிறது. பட்டி மண்டபப் படியிறக்கம்

இந்நிலை குபிரென்று தோன்றியதன்று . பல நூற் றாண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பெற்றுச் சமய நீருற்றப் பெற்று, பிணக்கு உரமிடப்பெற்றது . காழ்ப்பு முளைவிட்டு, தாக்கத் தளிர்தோன்றி பகடி தழைத்து, ஏளனம் அரும்பி, பண்பின்மை மலர்ந்தது . பயனின்மை காய்த்துக் கனிந்த நிலையை அடைந்துள்ளது.

பட்டி மண்டப வரலாற்றில் இந்தப் படியிறக்கம் கால ஆட்சியில் அவ்வப்போது படிப்படியாகவே விளைந்தது.

இவ்வாறு விளைந்தமைக்குப் பழங்காலம் முதல் சான்றோர்தம் நூல்கள் சான்றுகளை வைத்துள்ளன. அவற்றைக் கால வாரியாகக் காண்பது வரலாற்றுப் படி யிறக்கத்தை வெளிப்படுத்தும்.