பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [...] 283

வாது ஒரு தீது

வேந்தன் ஒடுவதற்கு வாரம் படினும்” என்று தொன்மை அவிநயம் குறித்ததையும், செற்றமும் சினமும், கலாமும் தோன்றிய நிலையை மணிமேகலை காட்டியதை யும் கண்டோம்.

தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூலாம் ஏலாதி,

வாதமிடுவதைச் சூதாடுவதோடு சேர்த்துப் பாடியது. மகரதோரண வாயிலையுடைய மாளிகையில் வாழும் பெருமைத்தகுதியுடையவன்,

‘சூது உவவான்; பேரான் (தன்னிலையில் பெயர மாட்டான்), சுலா (பிறர்மனத்தைக் கலக்குதல்) உரையான்; சினம் சேரான்” என்று அடுக்கி அடுத்து வாது உவவான்’ r

என்று வாதுசெய்தலைவிரும்பமாட்டான் என்றது.

ஆசாரக்கோவை, -

“படிறும் பயனிலவும் பட்டி உரையும்

வசையும் புறனும் உரையாரே என்றும்

அசையறு உள்ளத் தவர்’

என்று வஞ்சம், பயனின்மை முதலிய தீமைகளுடன் சேர்த்துப் பட்டி உரையையும், அசையும் உள்ளத்தவர் செயலாக்கியது. .