பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 T பட்டி மண்டப வரலாறு

வறிது ஆயிற்று என்றார். இஃது இன்று வார்த்தை கத்தும் வாதியர்களால் இன்றையப் பட்டி மண்டபமும் கருத்து வறிதாகியுள்ளதையும் குறிக்கிறது.

வறிது ஆகாத வகையிலும், நெறியிலும் தவத்திரு அடிகளார் தொடக்கமாகக் கருத்தில் மனம்பதித்த நடுவர் பெருமக்கள் காத்து வருகின்றனர். வழக்கிடும் போராளரும் பேணி வருகின்றனர் . கத்தும் மேடைகளாகப் பல இருப் பினும் “சடுகுடு மேடைகளாகச் சிலவே உள்ளன. ஒப்பனை யில்லாத நடிகர் களங்களாகவும் சில நேர்ந்து வருகின்றன. இவை மாறிச் செப்பம் பெறவேண்டும்.

பட்டி மண்டபத்தைப் பொற்காலத்தில் வீற் றிருக்குமாறு அமைத்த பெருமக்களும், அதற்குப் பொன் னணிகளாக விளங்கும் திருமக்களும் பாராட்டி வாழ்த்தி, நன்றி கூறத் தக்கவர்கள் . இவ்வாய்வு வழியும் பாராட்டு, வாழ்த்து நன்றி. - .