பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 H பட்டி மண்டப வரலாறு:

தொல்காப்பியம் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று பொருளற்ற சொல் இல்லை என் கிறது என்றாலும், தெரிபு வேறு நிலையில், குறிப்பில் தோன்றல்” என்று சொல், சொற்றொடர்ப் பொருளை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கொள்ளலாம் என்றது . இதனை நன்னூலார் “வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே’ என்றார் இவற்றில் குறிப்புச் சொல்லைவிட வெளிப்படைச் சொல்லே உண்மையாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்புச் சொல் அத்துணைச் சிறப்பன்று. -

பட்டி மண்டப ஆய்வின் வரலாறு

எனவே, இங்குச் செய்யப்பட்ட பட்டி ம்ண்டய வரலாற்று ஆய்வு இக்கால அறிவியல் தருக்க முறையை ஒட்டித் தமிழ்த் தொல்காப்பியத்தை முதன்மையாகவும், பிற இலக்கண இலக்கிய நூற்களை இன்றியமையாத் துணை யாகவும் சான்றுகளாகவும் கொண்டு செய்யப்பட்டது.

இப்பட்டி மண்டப வரலாற்று ஆய்வு தமிழ் நிலத்தை எல்லையாகக் கொண்டது. எனவே, தமிழ் நூல்களேபெருஞ் சான்றுகளாகக் கொள்ளப்பட்டன எழுபத்துமூன்று நூல் கள் சான்று நூல்களாகக் காணப்பட்டன. வடமொழியின் நான்மறை, மனுநூல், பகவத் கீதை உரிய இடத்துச் சான்றுகளாயின. ஆங்கில அறிஞர் தம் கருத்துக்களும், தருக்கமுறைப் புலக்கொள்கையும் துணையாயின.